மாதிரி
காலாண்டுத் தேர்வு - 2024
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 8
நேரம் : 2.30 மணி மதிப்பெண்
: 100
______________________________________________________________________
பகுதி
– I
I ) சரியான விடையைத் தேர்வு செய்க. 10×1=10
1. மக்கள் வாழும்
நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு
ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
2. இதழ்களைக்
குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ
3. பள்ளிக்குச்
சென்று கல்வி __________
சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல் இ) கேட்டல் ஈ) பாடுதல்
4. உடல்நலம் என்பது ______ இல்லாமல் வாழ்தல்
ஆகும்.
அ. அணி ஆ. பணி இ.
பிணி ஈ. மணி
5. ‘செத்திறந்த’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) செ +
திறந்த ஆ) செத்து + திறந்த இ) செ + இறந்த ஈ) செத் து + இறந்த
6. தொடக்க
காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.
அ)
தாவரங்களை ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ)
மருந்துகளை
7. பின்வருவனவற்றுள்
இறந்தகால வினைமுற்று _____.
அ)
படித்தான் ஆ) நடக்கிறான்
இ) உண்பான் ஈ) ஓடாது
8. கற்றவருக்கு
அழகு தருவது ________.
அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ)
கல்வி
9. புகழாலும் பழியாலும் அறியப்படுவது
_______
அ. அடக்கமுடைமை ஆ. நாணுடைமை இ. நடுவுநிலைமை ஈ. பொருளுடைமை
10. இன்றைய கல்வி _____
நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக:- 5×1=5
11. எழுத்துகளில்
புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ______.
12. உடல் எடை
அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.
13. புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு
போன்றது.
14. உடனிகழ்ச்சிப்
பொருளில் _____________ வேற்றுமை வரும்.
15.
செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
III) பொருத்துக:- 5×1=5
16. எடுத்தனன்
உண்டான் – பாரியினது
தேர்
17. ஆறாம் வேற்றுமை -
கம்பராமாயணம்
18. இயற்கை ஓவியம் -
முற்றெச்சம்
19. இயற்கை பரிணாமம் -
மண்ணால் குதிரை செய்தான்.
20. மூன்றாம்
வேற்றுமை - பத்துப்பாட்டு
பகுதி – II
IV) அடிபிறழாமல் எழுதுக:- 4 + 2 = 6
21. அ) “ வாழ்க நிரந்தரம்____ எனத்
தொடங்கும்பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )
ஆ) “ஓடை யாட “ எனத் தொடங்கி “ போராரோடி
“ என முடியும் ஓடை பாடலை அடிமாறாமல் எழுதுக.
22, “ யவர் “ என முடியும் திருக்குறளை எழுதுக
பகுதி – III
V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 5×2=10
23. தமிழ்
எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
24. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
25. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக
வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
26. அதிகமாக
உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
27.
நல்வாழ்விற்கு
நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
28. சான்றோருக்கு
அழகாவது எது?
29. திரு. வி. க.,
சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
VI) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
30. எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
31. வினைமுற்று
என்றால் என்ன?
32. முற்றெச்சத்தைச்
சான்றுடன் விளக்குக.
33. மெய்
எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
34. எச்சம் என்றால்
என்ன?
அதன் வகைகள் யாவை?
35. நான்காம்
வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
36. தெரிநிலை
வினைமுற்று எவற்றைக் காட்டும்?
VII) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 6×3=18
37. எழுத்துச்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
38.
தமிழ்மொழியை
வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
39. புயல்
காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
40. வள்ளைப்பாட்டு
என்பது நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச்
சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
41. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன
யாவை?
42. நோய்கள்
பெருகக் காரணம் என்ன?
43. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
44. அறிவியல் கல்வி
பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
பகுதி – IV
VIII) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 6×2=12
45. சரியான மரபுச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக்.
அ. கோழி _____. (கூவும்/கொக்க ரிக்கும்)
ஆ. பால் _____. (குடி/ பருகு)
46. தொடரில்
அமைத்து எழுதுக.
அ. வேடிக்கை -
ஆ. உடன்பிறந்தார் –
47. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
அ) கடமையைச் செய்__________
ஆ) பாரதியார்
பாடல்களின் இனிமைதான் என்னே!
48. கலைச்சொல் எழுதுக.
அ) Disease ஆ) Leopard
49. தமிழ் எண்களை எழுதுக.
அ) உலக ஓசோன் நாள் செப்டம்பர்
16 ----------
ஆ) உலக
வனவிலங்கு நாள் அக்டோபர் 6 ________
50. தொடர்களை
மாற்றுக.
அ) அந்தோ
! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக
மாற்றுக.)
ஆ)அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
51. உவமைத் தொடர்களைப் பயன்படுத்தி தொடர் அமைக்க.
உடலும் உயிரும் போல
பகுதி -V
IX) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 3×8=24
52. அ) எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக. ( அல்லது )
ஆ) நிலவளத்தினைக்
காப்பதற்கு மேற்கொள்ள வேண் டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
53 . அ தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ. “வெட்டுக்கிளியும் சருகுமானும்”
– கதையைச் சுருக்கி எழுதுக.
54. அ) விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக. ( அல்லது
)
ஆ) கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை
– நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை –
முடிவுரை.
Ok
ReplyDelete