மாதிரி முதல் இடைத் தேர்வு – 2024
6 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம் : 1.00 மணி மதிப்பெண் : 30
I) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×1=5
1. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்
அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி
2. மா என்னும் சொல்லின் பொருள்_____.
அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா
3 தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று
4. கிணறு என்பதை குறிக்கும் சொல் ___________
அ) ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு
5. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்
II) . ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி 3×2=6
6. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
7. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
8. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
9. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
10. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
III) ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2×3=6
11. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?
12. சிட்டுக்குருவியின் வாழ்க்கைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
13. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?
IV. அடிமாறாமல் எழுதுக 1×3=3
14. அ) ” தமிழுக்கும் அமுதென்று “ எனத் தொடங்கும் பாடலை எழுதுக ( அல்லது )
ஆ) “மாமழை” – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக
V. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி:- 1×5=5
15. அ) விடுப்பு வேண்டி உன் வகுப்பாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக ( அல்லது )
ஆ) இயற்கையைக் காப்போம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
VI) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 5×1=5
16. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
அ) கவிதை ஆ) பதிற்றுப்பத்து
17. பிரித்து எழுதுக. அ) வழித்தடம் ஆ) வேதியுரங்கள்
18. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.
மரங்களை வளர்த்து ____ யைக் காப்போம் .____ உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். (செயற்கை / இயற்கை)
19. கலைச்சொல் தருக. அ) Migration ஆ) CONTINENT
20. பிறமொழிக் கலப்பின்றிப் எழுதுக.
அ). எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
ஆ). பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க
KINDLY WAIT FOR 10 SECONDS