அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு மாதிரி காலாண்டு வினாத்தாளினை உருவாக்கி வழங்கியுள்ளோம். மேலும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு வினாத்தாளினை உருவாக்கியுள்ளோம். அந்த வினாத்தாளானது 60 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளில் பொதுத் தேர்வில் இடம் பெறக் கூடிய வினாக்களைக் கொண்டு வடிவமைத்துள்ளோம். இந்த் மெல்லக் கற்போர் வினாத்தாளினை அடைவுத் தேர்வாக கருதி மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும்.
உதாரணமாக......
ஒரு மதிப்பெண் வினாக்கள் 15
இரு மதிப்பெண் வினாக்களில் பிரிவு - 1 இல்
1. விடைக்கேற்ற வினா அமைக்க ( வினா எண் : 16 முதல் 20 க்குள்)
2. திருக்குறள் ( வினா எண் : 21 )
பிரிவு - 2 இல்
1. கலைச்சொல் ( வினா எண் : 22 முதல் 28க்குள் )
2. பகுபத உறுப்பிலக்கணம் ( வினா எண் : 22 முதல் 28க்குள் )
மூன்று மதிப்பெண் வினாக்கள்
பிரிவு - 1
1. உரைப் பத்தி வினா ( வினா எண் : 29 முதல் 31க்குள் )
பிரிவு - 2
1. மனப்பாடச் செய்யுள் ( வினா எண் : 34 )
பிரிவு - 3
1. அலகிடுதல் ( வினா எண் : 35 முதல் 37க்குள் )
ஐந்து மதிப்பெண் வினாக்களில்
1. கடிதம் ( வினா எண் : 39 )
2. காட்சி ( வினா எண் : 40 )
3. படிவம் ( வினா எண் : 41 )
4. நிற்க அதற்குத் தக ( வினா எண் : 42 )
எட்டு மதிப்பெண் வினாக்களில்
1. பொதுக்கட்டுரை ( வினா எண் : 45 )
மேலும் உங்கள் மாவட்டங்களில் நடைபெற்ற உள்ள காலாண்டுத் தேர்வு 2024 வினாத்தாளினை 8667426866 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் அல்லது tamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி மற்ற மாணவர்களுக்கு உதவும் படி அன்போடு வேண்டுகிறேன்.
மெல்லக் கற்போருக்கான
காலாண்டு மாதிரி வினாத்தாள் - 2024
பதிவிறக்கம் செய்ய