அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். இந்த கல்வி ஆண்டில் மெல்லக் கற்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அவர்களுக்கு மெல்லக் கற்கும் என்ற நிலையிலிருந்து கூர்நோக்கு மாணவர்கள் ( FOCSUED LEARNERS ) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதந்தோறும் நாம் அறிக்கை தயார் செய்து வைத்து இருக்க வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக நமது வலைதளத்தில் பொள்ளாச்சி நசன் ஐயா அவர்கள் வழங்கிய பயிற்சிக் கட்டகம் உங்களுக்கு இங்கு வழங்கியுள்ளேன். ஆசிரியர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பயிற்சி கட்டகத்தை முதலில் எழுத்து அறியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அதற்கு அடுத்தது அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை எளிமையாக நாமே உருவாக்கலாம். இந்த பயிற்சிக் கட்டகத்தை பதிவிறக்கம் செய்ய நீங்கள் பத்து விநாடிகள் காத்து இருந்து பின் தோன்றும் DOWNDLOAD என்ற நீல நிற பொத்தானை அழுத்தி பெற்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி.
கூர் நோக்கு மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம்
KINDLY WAIT FOR 10 SECONDS