10TH-TAMIL-MODEL HALF YEARLY QUESTION-1

 

அரையாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் – 1/2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                              மதிப்பெண் : 100

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

 

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)       அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                           15×1=15

II )   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                 

1.’காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________

) இலையும்,சருகும்       ) தோகையும் சண்டும் ) தாளும் ஓலையும்      ) சருகும் சண்டும்

2. முறுக்கு மீசை சிரித்தார். தடித்தச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

) பண்புத்தொகை           ) உவமைத்தொகை        ) அன்மொழித்தொகை   

) உம்மைத்தொகை

3. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு                 ) எழுவாய்                 ) உவம உருபு                     ) ரிச்சொல்

4. புறத்திணைகளின் வகைகள் _____________

அ) 10            ஆ) 12           இ) 8   ஈ) 6

5. பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்                 ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்              ஈ) வானத்தையும் பேரொலியையும்

6. ‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

7.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா       ஆ) சீலா                 இ) குலா       ஈ) இலா

8. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு – என்பதில் எட்டு, பத்து என்பதன் தமிழ் எண்ணுரு

அ) அ, ௧ ௦      ஆ) ௭ ௧        இ) ௬ ,௧ ௦       ஈ) ௧ ௦ ,௭       

9. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்        ஆ) தளரப் பிணைத்தால்  இ) இறுக்கி முடிச்சிட்டால்      

ஈ) காம்பு முறிந்தால்

10. குறிப்பு விடைகளின் எண்ணிக்கை _______

அ) 3            ஆ) 4           இ) 5             ஈ) 6

11. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

 அ) உழவு,மண்,ஏர்,மாடு      ஆ) மண்,மாடு,ஏர்,உழவு      இ) ஏர்,உழவு,மாடு,மண்

ஈ) உழவு,ஏர்,மண்,மாடு

பாடலைப்படித்து (12,13,14,15) வினாக்களுக்கு விடையளிக்கவும்.

“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று “

12 பாடல் இடம் பெற்ற நூல் _____

அ) நீதிவெண்பா  ஆ) புறநானூறு        இ) வெற்றிவேற்கை          ஈ) கொன்றை வேந்தன்

13 பாடலின் சீர் மோனைச் சொற்கள்

அ) அருளை அருத்துவதும்       ஆ) அருளை,அறிவை       இ) அகற்றி,அருந்துணையாய்      ஈ) அறிவை,அகற்றி

14. அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால்

அ) அருந்துணை+யாய்   ஆ) அருந்து + துணையாய்            இ) அருமை + துணையாய் 

ஈ) அரு + துணையாய்

15. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது _______

அ) அன்பு            ஆ) கல்வி               இ) மயக்கம்             ஈ) செல்வம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                               4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. வசன கவிதை குறிப்பு வரைக

17. விடைக்கேற்ற வினா அமைக்க

அ. நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.

ஆ. மொழிபெயர்ப்பு,மொழியில் புதுக் கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக

19. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

20. உறங்குகின்ற கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்

 காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய் – கும்பகன்னனை என்னச் சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21.  “ எப்பொருள் “ – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                             5×2=10

22. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) தேமா புளிமா காசு                   ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு                    ஈ) புளிமா தேமா பிறப்பு

23. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-

அ.) இன்சொல்                        ஆ) எழுகதிர்  .

24. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

25. கலைச்சொல் தருக:- அ) EMBLEM               ஆ)  DOCUMENT

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:- மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

26. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

இதோ…………இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

27. அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

சிலை – சீலை

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘

            இது போல் இளம் பயிர்வகை  ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.

30. சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின் ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன,

 

அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?

ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை எழுதுக.

இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?

31. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32 தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவனவற்றைச் சுருக்கமாக எழுதுக.

33 மன்னன், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?

34.  அடிபிறழாமல் எழுதுக.

“அன்னைமொழியே“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்  (அல்லது )

“ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதம் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                        2×3=6

35. . அருளொடும்  அன்பொடும் வாராப் பொருளாக்கம்

      புல்லார் புரள விடல் – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.

36. தன்மை அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

37. விடையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                              5×5=25

38. அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

( அல்லது )

ஆ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை எழுதுக..

39. அ) ‘ மரம் இயற்கையின் வரம் ‘ என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

( அல்லது )

 “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “  - குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி,அதனைச் செயல்படுத்தத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் வேண்டி, தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்பிகிறார். அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எண் 13156071 அவரின் மதிப்பெண் பட்டியல் தமிழ் – 90, ஆங்கிலம் -80, கணிதம் – 90, அறிவியல் – 80, சமூக அறிவியல் - 90. தேர்வர் தம்மை யாழினியாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.

42.அ) மொழிபெயர்க்க.

          The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக

( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                        3×8=24

43. அ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா?வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘ செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள் ‘ பற்றி விவரித்து எழுதுக.

( அல்லது )

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைக் குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை விரிவாக எழுதுக.

44. அ) பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயல்.’ அன்னமய்யா’ புதிதாக வந்தவருக்கு உணவிட்ட செயலோடு ஒத்திருத்தலை ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதை வழி விளக்கி எழுதுக.

( அல்லது )

‘ என் மக்கள் அனைவருக்கும்  நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள் ‘ என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

45. அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

( அல்லது )

ஆ) முன்னுரை – இளமையும் கல்வியும் – முதல் விண்வெளிப் பயணம் – இறுதிப் பயணம் -  விருதுகளும் அங்கீகாரங்களும் – முடிவுரை – குறிப்புகளைக் கொண்டு

 “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

 

CLICK HERE TO PDF

CLICK HERE 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post