அரையாண்டுத்
தேர்வு மாதிரி வினாத்தாள் – 1/2023
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம்
+ 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள் :
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை
மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு :
I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த
அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
i)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 15×1=15
II
) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர்________
அ) அப்பாத்துரையார் ஆ) இளங்குமரனார் இ) பாவாணர் ஈ) திரு.வி.க
2. செய்தி
1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை
மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
செய்தி 3 – காற்றின்
ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1,3 ஆகியன சரி
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ)
காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
4. சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________
அ) அகவற்பா ஆ)
வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
5. பாரத
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ)
சீலா இ) குலா ஈ) இலா
6. குளிர்
காலத்தைப் பொழுதாக் கொண்ட நிலங்கள்______________________________________
அ) முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ)
மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
7. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்
___
அ) அமைச்சர், மன்னன் ஆ)
அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன்
ஈ) மன்னன்,இறைவன்
8. “ வெள்ளை சட்டை வந்தார் “ – இத்தொகையின்
வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகைம் இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
9. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை இல்லாததால்
10. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன்
காரணம்__________________
அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை
கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல்
ஈ) கோட்டையை முற்றுகையிடல்
11 விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை_____
அ) நடிகர் ஆ)
கரு இ) இயக்குநர் ஈ) தயாரிப்பாளர்
பாடலைப்படித்து (12,13,14,15) வினாக்களுக்கு
விடையளிக்கவும்.
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி
12.இப்பாடலடிகள்
இடம் பெற்ற நூல்.
அ) நீதிவெண்பா ஆ) சிலப்பதிகாரம் இ) கம்பராமாயணம் ஈ) மணிமேகலை
13 ) இப்பாடலின் ஆசிரியர் _________
அ) சாத்தனார் ஆ) கம்பர் இ) இளங்கோவடிகள் ஈ) நக்கீரர்
14. பாடலில் உள்ள சீர் மோனைச் சொற்களைக்
காண்க
அ) கண்ணுள் - மண்ணீட்டு ஆ) கிழியினும் - கிடையினும்
இ) பொன்செய் – நன்கலம் ஈ) தருநரும் – துன்னரும்
15. மண்ணீட்டாளர் என்போர் யார்
?
அ) ஓவியர் ஆ)
சிற்பி இ) நெய்பவர் ஈ) எண்ணெய் விற்பவர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக
17. விடைக்கேற்ற வினா அமைக்க
அ. சதாவதானம்
என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்
ஆ. மொழிபெயர்ப்பு,மொழியில் புதுக்
கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
18. . “ கழிந்த பெரும் கேள்வியினான் எனக்
கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த
பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த
பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?
19 குறிப்பு வரைக – அவையம்.
20. . மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!”
- இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள
காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக
21. “ உலகு “ – என முடியும் திருக்குறளை
எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. உரைத்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக
23. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து
எழுதுக
அ. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஆ. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்
24. பழமொழியை நிறைவு செய்க:-
1. உப்பில்லாப்_____________
2. ஒரு பானை_______________
25. கலைச்சொல் தருக:- அ) Biotechnology ஆ) Consulate
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா
சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-
தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
அ. மலை – மாலை ஆ. சிலை - சீலை
27. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
அ. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. ( தனிச் சொற்றொடராக மாற்றுக )
ஆ. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
28. பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
இரண்டு
தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக்
கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது
போல் ஓர் உரையாடல் அமைக்க.
30. தமிழர்,போரிலும்
அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார்,
முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.போரின் கொடுமையிலிருந்து
பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல்
போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர்
செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
அ)
ஆவூர் மூழங்கிழாரின் போர் அறம் யாது?
ஆ)
போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?
இ)
யாருக்கெல்லாம் தீங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்?
31. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில
எடுத்துக்காட்டுகள் தருக.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32
மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
33
‘ முதல் மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா.கவிபாடுகிறார்?
34. அடிபிறழாமல் எழுதுக.
“விருந்தினனாக“ எனத் தொடங்கும் காசிகாண்டம் பாடல் (அல்லது )
“ நவமணி “ எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் – இக்குறட்பாவிற்கு
அலகிட்டு வாய்பாடு தருக.
36. தீவக அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37. கொண்டுக்கூட்டுப்
பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
( அல்லது )
ஆ) தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ளத் தொடர்பை எழுதுக
39. அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்
அதற்காகப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக்
கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ. உயர்கல்வி
படிப்பு படிப்பதற்காக நீங்கள் படித்த பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி,
தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41. திருச்சி மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க
எண்50 இல் வசிக்கும் தமிழன்பன் மகள் வெண்பா முதுகலை கணக்குப்பதிவியல் படித்து விட்டு அங்குள்ள வணிக நிறுவனத்தில் கணக்கு
ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை வெண்பாவாக நினைத்து உரிய படிவம்
நிரப்புக,
42.அ) மொழிபெயர்க்க.
2. Language is the road map of a culture. It tells you where its people
come from and where they are going – Rita Mae Brown
( அல்லது )
ஆ) நயம் பாராட்டுக:-
தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ்
மொழியே
உணர்வினுக் குணர்வதாய் ஒளிர்தமிழ் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ்
மொழியே
தழைத்தினி தோங்குவதாய் தண்டமிழ் மொழியே - கா.நமச்சிவாயர்
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
மொழி
பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்.
பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே
நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த
முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து
ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம்
நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை
அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு
வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன.
பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளன.
( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக
எதனைக் கொள்ளலாம்?
( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?
( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?
( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.
( v ) இப்பத்திக்குப்
பொருத்தமான தலைப்பு இடுக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக. ( அல்லது )
ஆ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய
வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை -
மேற்கண்ட
குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
இயல் – 6
44. அ) அழகிரிசாமியின் “ ஒருவன் இருக்கிறான் “ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை
மாந்தர் குறித்து எழுதுக. ( அல்லது )
ஆ ஒரு
பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின்
மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம்
தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்
45. குறிப்புகளைக் கொண்டு அரசு பொருட்காட்சிக்குச் சென்ற
நிகழ்வை கட்டுரையாக எழுதுக
குறிப்பு : முன்னுரை
– அரசு பொருட்காட்சி – நுழைவுக் கட்டணம் – பல்வேறு அரங்குகள் – பொழுது போக்குகள் –
உணவு அரங்கம் – அங்காடிகள் – பொருட்காட்சி நன்மை - முடிவுரை ( அல்லது )
ஆ) குறிப்புகளை கொண்டு கட்டுரை எழுதித்
தலைப்பிடுக.
முன்னுரை
– சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு – சாலைவிதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
– விபத்துகளைத் தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை
அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வு
மாதிரி வினாத்தாள் – 2
ஆக்கம்
உங்கள் தமிழ்விதை மற்றும்
கல்விவிதைகள் வலைதளம்
உங்கள் மாவட்ட வினாத்தாள்
மற்றும் கற்றல் வளங்களை 8667426866 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும், thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில்
அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறோம். நீங்கள் செய்யும் இந்த உதவி தமிழ்நாடு முழுவதும்
உள்ள மாணவர்களுக்கு சென்றடையும்.
எங்களோடு பயணிக்க கீழ் வரும்
விரைவுத் துலங்கள் குறியீட்டினைப் பயன்படுத்தவும்.
வாட்ஸ் அப் ( புலனம் ) டெலிகிராம் ( தொலைவரி
https://chat.whatsapp.com/Dne9LF6usbOJozqPvsMNZq https://t.me/thamizhvithai