அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழில் வாசிக்க , எழுத தடுமாறும் குழந்தைகள் மற்றும் எழுத்துகளை அறியாத குழந்தைகள் எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் அனைத்து ஆசிரியப் பெருமக்களிடம் உள்ளது. அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் முக்கியமானது. அவற்றில் இந்த தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் தற்போது பங்கெடுத்துக் கொள்கிறது. தாய்த்தமிழை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அந்த வகையில் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் படிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை எய்த வேண்டும். அதற்கு நாம் பல்வேறு விதமான முயற்சிகள் செய்து வருகிறோம்.
பொள்ளாச்சியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிறுவிக்கும் ஆசிரியராகப் பணிப்புரிந்து பணி ஓய்வு பெற்று இன்று உலகம் முழுமைக்கும் சென்று தமிழ் எழுத , படிக்க சரளமாக தன்னுடைய பணி அனுபவத்தில் புதிய தமிழ் கற்றல் அணுகுமுறையை கையாண்டுள்ளார். அந்த முறையில் மாணவர்களுக்கு எவ்வாறு எழுத்துகளை அறிமுகம் செய்ய வேண்டும்? அவற்றை எவ்வகையில் ஆசிரியர் பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தினையும் காணொலிகளையும் உருவாக்கி இன்று உலகம் முழுமைக்கும் தமிழை கற்பித்து வருகிறார். அவரின் படைப்புகள் மற்றும் காணொளிகளை நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழு அவரின் உரிய அனுமதியுடன் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் நமது வலைதளம் மூலம் இரண்டு மாதங்களில் அனைவரையும் இயல்பாக படிக்கும் மாணவர்களாக மாற்றி அவர்களின் வாழ்விலும் ஒளியேற்ற பயிற்சி செயல்பாடுகளை வழங்கி வருகிறோம். அதில் எழுத்துத் தெரியாத மாணவர்களை எழுத்தை அறிய வைப்பதோடு அல்லாமல் 30 நாள்களில் செய்தித்தாள் வாசிக்கும் அளவுக்கு உண்டாக்க முடியும் என்ற ஒரு ஊக்கத்தை அவர் நமக்கு வழங்குகிறார். அவரின் படைப்புகளை இங்கே நாம் பகிர்ந்துள்ளோம். அவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிட வேண்டுமாய் உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.
கற்றல் இனிமை
எழுத்து அறியாத மாணவர்களுக்குகான
மா. நடேசன் அவர்களின் கோப்புகள்
PDF FILES
VIDEO AND AUDIO FILES