//தேர்வுகள் அவசரம்// //தனிக்கவனம்//
சேலம் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண். 13678/ ஆ6/2022 நாள். .12.2022
பொருள்: |
பள்ளிக்கல்வி – அரையாண்டுத் தேர்வுகள் - சேலம் மாவட்டம் – 6 முதல் 12ஆம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்துதல் - அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் – மாவட்ட
பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையப் பள்ளித் தலை ஆசிரியர்கள் – அறிவுரை
வழங்குதல். - சார்பு. |
பார்வை : |
சேலம் முதன்மைக் கல்வி
அலுவலரின் நேரடி அறிவுரை நாள்.
.12.2022 |
=====
சேலம் மாவட்டத்தில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவர்களுக்கு 14.12.2022 தேதி முதல் நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமின்றி கீழ்கண்ட வழிமுறைகளை
பின்பற்றி சிறப்பாக நடத்திடவும், விடைத்தாள்களை மந்தண முறையில் மதிப்பீடு செய்திடவும்
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து
மாவட்டக் கல்வி அலுவலர்கள்/ அனைத்து மாவட்ட பொதுத் தேர்வு மையப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
மற்றும் அனைத்து வகை உயர் /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு
தெரிவிக்கலாகிறது.