நாமக்கல் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
வினாத்தாள் பெற
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நாமக்கல் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஆ. மணிவகை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
அ.கடல் நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
அ. வேற்றுமை உருபு |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
இ.ஐந்தாம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஈ. இலா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
ஈ.மன்னன்,இறைவன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
இ.மார்கழி,தை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
ஆ. தன் வரலாறு நூல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஆ. அதியன்,பெருஞ்சாத்தன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
இ.உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
11. |
ஈ. தலையில் கல் சுமப்பது |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
12. |
ஆ. பரிபாடல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
13. |
ஆ.பூதந்சேந்தனார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
14. |
இ.அடுக்குத் தொடர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
15. |
ஆ. யுகம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16. |
மாமிசத்தையும், தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
அ. மொழிப்பெயர்ப்பு என்பது யாது? ஆ. இந்தியா எப்போது விடுதலைப் பெற்றது? |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
தம்பி! அழாதே வரும்போது உனக்கு
அப்பா பொம்மைகள் வாங்கி வருவார்.தின்பண்டங்கள் வாங்கி வருவார் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல் உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20. |
சித்தாளுவின் வாழ்வினை நாகூர் ரூமிக் கூறுகிறார். |
1
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
21
|
கட்டாய வினா: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
|
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24 |
பொறித்த – பொறி + த் +த்+அ பொறி – பகுதி த் – சந்தி த் – இறந்தகால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25. |
அ. இயற்கை காடுகளில் செல்ல செயற்கை கருவிகள் உதவுகின்றன. ஆ. அவன் விதி அவனை வீதியில் நிறுத்தியது. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26. |
அ. சின்னம் ஆ. ஆவணம் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
27. |
அ. வெள்ளந்தி ஆ. கருக்கும் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28.
|
அ.
|
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
30
|
.அ. மொழிபெயர்ப்பு ஆ. புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது.பிற இனத்தவரின்
பண்பாடு,நாகரிகம்,பழக்க வழக்கம் அறிய முடிகிறது. இ. மொழிபெயர்ப்பு |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31. |
Ø
வணிக நோக்கமின்றி
அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம்
காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
v மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே
எதிர்பார்த்து வாழ்கிறேன். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33. |
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது v அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய
கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன . v இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற
அரைவடங்கள் ஆடுகின்றன v நெற்றியில் சுட்டி பதிந்தாடுகின்றன. v
காதுகளில்
குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
34. |
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர்,தாயார்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் - நப்பூதனார் ( அல்லது )
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் -
கண்ணதாசன் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
வினா ஆறு வகைப்படும். 1. அறிவினா - தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது. மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.
2. அறியா வினா - தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக
வினவுவது. ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’
என்று மாணவர் கேட்டல். 3. ஐய வினா - ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது. ‘இச்செயலைச்
செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என
வினவுதல். 4. கொளல் வினா -
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும்
பொருட்டு வினவுவது. ‘ ஜெய காந்தன் சிறுகதைகள் இருக்கிறதா ?’
என்று நூலகரிடம் வினவுதல். 5. கொடை வினா - பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு
வினவுவது. ‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள்
உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?’ என்று
கொடுப்பதற்காக வினவுதல். 6. ஏவல் வினா - ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு
வினவுவது. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36. |
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர்
தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
37 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38 |
Ø
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி
மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம்
எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர்
நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம்
கொண்ட அரும்புகள். முதுப் பெண்கள்
மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர். இது விரிச்சி என அழைக்கப்படும் ஆற்றுப்படுத்துதல் : இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல் உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல் முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன்
வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர் முடிவுரை : Ø இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப்
பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
38 |
ஆ.
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
அ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு
வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப்
போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த
உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல்
தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் :
04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சென்னை.
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
ஆ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட
வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில்
பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம் “ எனும்
தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய்
பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள்உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் :
04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001.
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
(
ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை
எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள
இந்தக் காட்சி சமூகத்திற்கு
தேவையான காட்சி சமூக விளைவை
ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும்
அறிவுறுத்தும் காட்சி |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
மொழிபெயர்க்க கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி
நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “ ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென
பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும்
அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
படிவத்தில் அனைத்து படிநிலைகளும் சரியாக நிரப்பி
இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42
|
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான வினா: 1.
தியாகம் 2.
பிறருக்கு உதவுதல் 3.
பிறர் துன்பம் தீர்ப்பது 4.
உதவி செய்தல் 5.
பிறர் துன்பத்தைத் தம் துன்பமாக கருதி உதவுதல் சான்றோருக்குக் கடன் என்கிறார் நல்லந்துவனார் |
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|||||||||||||||||||||||||||||||||||||
43 |
அ) குறிப்புச் சட்டம்
வரவேற்பு : ·
என்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன். ·
அவர்கள்
அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன். ·
வந்தவர்களுக்கு
முதலில் நீர் அருந்தத் தந்தேன். விருந்து உபசரிப்பு : ·
வந்தவர்களுக்கு
கறியும், மீனும் வாங்கி வந்தேன். ·
மாமிச உணவை
வாழை இலையில் பரிமாறினேன். ·
அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து
கவனித்தேன். நகர்வலம் : ·
விருந்து
முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன். ·
ஊரின்
சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன். இரவு விருந்து : ·
நகர்வலம்
முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன். ·
இரவில் இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப்
படைத்தேன். பிரியா விடை : ·
இரவு விருந்து
முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர். எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம்
வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன் |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43
|
ஆ. அ) வாசிப்போம் நேசிப்போம் இதழ் வெளியீடு இதழ் : ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ் எழுத்தாளர் : ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் ) இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில்
வெளிவரும். இப்போது பரபரப்பான விற்பனையில்..... இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்….. நன்றி |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44. |
அ. குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி
இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன்
இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ்
வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள்
கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.
உதவிக்கரம் ·
மிஸ்வில்சன்
மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம் |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44 |
ஆ) குறிப்புச்
சட்டம் இட்டு, உரிய உட் தலைப்புகள் மூலம் இராமானுசர் நாடகத்தின் மையக் கருத்து குன்றாமல்
சுருக்கமாக ஏற்புடைய விடையாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் .. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
அ.
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை
தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச்
செய்தார். Ø
வீரமாமுனிவர்
தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø
தமிழ் தாத்தா
உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை
கொண்ட மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று
சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்
|
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
ஆ.
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது
போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில்
கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.