7TH - TAMIL - TERM 1 - UNIT 3 - QUESTION BANK - PDF

  

ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவம்

வினாத் தொகுப்பு

இயல் - 3

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ் – வினாத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 3

நாடு ,சமூகம்                                                                       புலி தங்கிய குகை                                             

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. 'யாண்டு' எனனும் சொல்லின் பொருள் _______.

அ) எனது           ஆ) எங்கு           இ) எவ்வளவு      ஈ) எது

2. ‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) யாண்டு + உளனோ?             ஆ) யாண் + உளனோ?

இ) யா + உளனோ?                    ஈ) யாண்டு + உனோ?

 3. ‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) கல்லளை      ஆ) கல்அளை     இ) கலலளை     ஈ) கல்லுளை

ஆ ) குறுவினா                                                                           .         

1. தம் வயிறறுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

இ) சிறுவினா                                                                               

 1. தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

ஈ) சிந்தனை வினா                                                                            

 1. தாய் தன் வயிற்றை புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?

பாஞ்சை வளம்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.

அ) தோரணம்     ஆ) வானரம்       இ) வாரணம்      ஈ) சந்தனம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,

அ) முயல்           ஆ) நரி              இ) பரி               ஈ) புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு      ஆ) படுக்கையறை உள்ள வீடு

இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு  ஈ) மாடி வீடு

 4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) பூட்டு + கதவுகள் ஆ) பூட்டும் + கதவுகள்  இ) பூட்டின் + கதவுகள்

ஈ) பூட்டிய + கதவுகள்

5. ‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) தோரணம் + மேடை ஆ) தோரண + மேடை  இ) தோரணம் + ஒடை

ஈ) தோரணம் + ஓடை

 6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) வாசல்அலங்காரம் ஆ) வாசலங்காரம்  இ) வாசலலங்காரம் ஈ) வாசலிங்காரம்

ஆ) பொருத்துக:-

 பொக்கிஷம் - அழகு

சாஸ்தி - செல்வம்

விஸ்தாரம் - மிகுதி

சிங்காரம் – பெரும்பரப்பு

இ) குறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

ஈ) சிறுவினா                                                                                    

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

உ) சிந்தனை வினா                                                                          

1. நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன?

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்து இராமலிங்க தேவர்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.

அ) தூத்துக்குடி    ஆ) காரைக்குடி   இ) சாயல்குடி      ஈ) மன்னார் குடி

2. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் _____.

 அ) இராஜாஜி     ஆ) நேதாஜி        இ) காந்திஜி        ஈ) நேருஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தே வரைப் பாராட்டியவர் _____.

அ) இராஜாஜி      ஆ) பெரியார்       இ) திரு.வி.க.      ஈ) நேதாஜி

ஆ) குறுவினா:-

1. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது?

3. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

இ) சிறுவினா:-

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப்பற்றி எழுதுக.

2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?

ஈ) சிந்தனை வினா:-

1. சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

வழக்கு

அ) பொருத்துக.

1. பந்தர் - முதற்போலி

2. மைஞ்சு - முற்றுப்போலி

3. அஞ்சு - இடைப்போலி

4. அரையர் – கடைப்போலி

ஆ) குறு வினா:-

1. வழக்கு என்றா ல் என்ன?

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

மொழியை ஆள்வோம்

அ) பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க .

 1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

 4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்

ஆ). எழுவாய், பயனிலை, செயப்ப டுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து

தொடர்களை எழுதுக.

1. மாறன் பாடம் படித்தான்

2. இளங்கோ கேள்வி கேட்டான்

3. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

4. கபிலரின் நண்பர் இடைக்காடனார்

5. ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்

இ) கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

நான் விரும்பும் தலைவர்..

மொழியோடு விளையாடு

அ) இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார் – மாட்டிற்கு புல் கொடுத்தார்

 2. பாட்டு பொருள் எழுது  - பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர்  - செடிக்கு பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி – முல்லைக்குத் தேர் தந்தான் பாரி

 5. சுவர் சாந்து பூசினாள் – சுவருக்குச் சாந்து பூசினாள்

ஆ) இரண்டுசொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

கண்

அழகு

உண்டு

கண்ணழகு

கண்ணுண்டு

மண்

 

 

விண்

 

 

பண்

 

 

இ ) அகம் என முடியும் சொற்களை எழுதுக.

 (எ.கா.) நூலகம்

ஈ) கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக. (எ.கா.) திருக்குறள் பால்களைக் கொண்டது.

1. எனது வயது ______

2. நான் படிக்கும் வகுப்பு _____

 3. தமிழ் இலக்க ணம் _____ வகைப்படும்.

4. திருக்குறளில் ____ அதிகாரங்கள் உள்ளன.

5. இந்தியா _____ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

உ) குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

1. மூதறிஞர்  

2. வீரமங்கை

 3. பாஞ்சாலங்குறிச்சி வீரன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன்  

5. கொடிகாத்தவர்  


6. எளிமையின் இலக்கணம்

7. தில்லையாடியின் பெருமை

 8. கப்பலோட்டிய தமிழர்  

9. பாட்டுக்கொரு புலவன்  

10. விருதுப்பட்டி வீரர்

11. கள்ளுக்கடைமறியல் பெண்மணி

 12. மணியாட்சியின் தியாகி

ஊ) கலைச்சொல் அறிக:-

Ballad

Elocution


Courage

Unity

Sacrifice

Slogan

Political Genius

Equality

CLICK HERE TO GET PDF

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post