6TH - TAMIL - TERM 1 - UNIT 2 - THIRUKKURAL - GUIDE

 

இளந்தமிழ்

ஆறாம் வகுப்பு

தமிழ் – வினா – விடைத் தொகுப்பு

பருவம் : 1                                                                 இயல் : 2

வாழ்வியல்                                                                             திருக்குறள்

மனப்பாடக் குறள்கள்

1. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

 எடுப்பதூஉம் எல்லாம் மழை

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

 என்பும் உரியர் பிறர்க்கு.

3. இனிய உளவாக இன்னாத கூறல்

 கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______

அ) ஊக்கமின்மை ஆ) அறிவுடைய மக்கள்  இ) வன்சொல்  ஈ) சிறிய செயல்

2. ஒருவருக்குச் சிறந்த அணி

அ) மாலை  ஆ) காதணி  இ) இன்சொல்  ஈ) வன்சொல்

ஆ) பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.

 1. இனிய உளவாக இன்னாத கூறல்

   கனியிருப்பக் காய் கவர்ந் தற்று.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

 என்றும் உரியர் பிறர்க்கு.

ஆ) நயம் அறிக.

1. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

  செயற்கரிய செய்கலா தார்

இந்தக் குறளில் உள்ள  எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனை :- செயற்கை – செய்வார் செயற்கரிய  செய்கலா

எதுகை:- செற்கரிய – செற்கரிய செய்வார் – செய்கலா

இ) பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக.

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

   செயற்கரிய செய்கலா தார்

ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்

இ) இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இ) குறுவினாக்கள்

1. உயிருள்ள உடல் எது?

அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்.

2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?

அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம்

3. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

அன்பிலார் – எல்லா பொருளும் தனக்கே உரியது என்பார்கள்

அன்புடையார் – தன் உடம்பும் பிறர்க்கே என எண்ணுவர்

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com                                           www.kalvivithaigal.com


CLICK HERE TO GET PDF - GUIDE

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post