அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இனிய வணக்கம். பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6 முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நமது தமிழ் விதை வலைதளமானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சியினை எளிதாக்குவதற்காக பல்வேறு பயிற்சி வினாக்கள், இணைய வழித்தேர்வுகள் மற்றும் தேர்வு சமயத்தில் வழிகாட்டும் தேர்ச்சி வழிக்காட்டிக்கான இணைய வகுப்பு என தொடர்ந்து நமது வலைதளம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. மாதிரி வினாத்தாளினை நமது வலைதளத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மாதிரி வினாத்தாள்
2021-2022
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும்
சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின்
அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே
எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து
பகுதிகளைக் கொண்டது.
ii)
விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I
( மதிப்பெண்கள் : 15 )
i)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1.காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும்
நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்டப் பகுதி குறிப்பிடப்படுவது________
அ) இலையும் சருகும் ஆ) தோகையும்,சண்டும் இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
2. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும்,எழுதுவதும்
___________
அ) வழாநிலை ஆ) வழுநிலை இ) வழுவமைதி ஈ) கால வழுவமைதி
3.’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன்
குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
அ) திருத்தணியும்,திருப்பதியும் ஆ) திருப்பரங்குன்றமும் பழனியும்
இ) திருப்பதியும் திருத்தணியும் ஈ) திருப்பதியும் திருச்செந்தூரும்
4. வாய்மையே மழை நீராகி – இத்தொடரில்
வெளிப்படும் அணி
அ) உவமை ஆ) தற்குறிப்பேற்றம் இ)
தீவகம் ஈ) உருவகம்
5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு
பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ)
புளிமா தேமா பிறப்பு
6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….
அ) உழவு,மண்,ஏர்,மாடு ஆ)
மண்,மாடு,ஏர்,உழவு
இ) ஏர்,உழவு,மாடு,மண் ஈ)
உழவு,ஏர்,மண்,மாடு
7. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்
அமைந்த பாவினம்
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
8. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின்
புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக்
கொள்வது_____________
அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக்
கலையாக்கினார்
ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே
எழுதினார்
இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.
9. சோலையில் பூத்த மணமலர்களில்
சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப்
பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.
அ) பூஞ்சோலைகள் – அரும்புகள் ஆ) மலை – எறும்புகள்
– தேன்
இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன் ஈ) கானகம் – வண்டுகள் - நீர்
10. வெட்டிய மரங்களுக்கு ஈடாக
____________ நட்டனர்.
அ) கொடிகளை ஆ) நாற்றுகளை இ)
மரங்களை
ஈ) மரக்கன்றுகளை
11. குமரி மாவட்டப்
போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________
அ) திரு.பிரகாசம் ஆ) மார்ஷல்.ஏ.நேசமணி இ) தனிநாயகம் அடிகள் ஈ) ந. முத்துசாமி
பாடலைப்
படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
வண்மையில்லை யோர்வறுமை
யின்மையால்
திண்மையில்லை
நேர்நெறுக ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை
யிலாமையால்
வெண்மையில்லை
பல்கேள்வி மேவலால்
12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள
எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) வண்மை
- வறுமை ஆ) திண்மை – நேர்மை
இ) உண்மை
- வெண்மை ஈ) பொய் – பல்கேள்வி
13 ) பாடலின் மோனைச்
சொற்களைக் குறிப்பிடுக
அ) வண்மை
– வெண்மை ஆ) திண்மை - நேர்மை
இ) உண்மை
- வெண்மை ஈ) பொய் – திண்மை
14 ) புகழுரை -
பிரித்து எழுதுக
அ) புகழ்
+ இரை ஆ) புகழ் + உரை இ) புகழு + உரை ஈ) புகழு + இரை
15 ) இப்பாடல்
இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) நீதி
வெண்பா ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம் ஈ)
தேம்பாவணி
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16.
காலக்கழுதை கட்டெறும்பானதும் – கவிஞர் செய்தது யாது?.
17.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ.
உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார்
நல்வேட்டனார்
ஆ.
.காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்ற அறப்போர் முறையைத்
தென்னாப்பிரிக்காவில் தொடங்கி வைத்தார்.
18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும்
பாங்கினை எழுதுக.
19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம்
ஒன்றினைக் குறிப்பிடுக.
20. தமிழ்நாட்டின் நெல் வகைகளை எழுதுக
21. கண் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22.
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதி,தொடரில் அமைக்க.
23.
ஒலித்து– பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24.
குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.
25.
குறிப்பு விடைகளின் வகைகளை எழுதுக
26.
மரபுத் தொடருக்கான பொருள் அறிந்து தொடர் அமைக்க.
அ. மனக் கோட்டை ஆ. கண்ணும் கருத்தும்
27.
கலைச்சொல் தருக:- அ. philosoher ஆ) Homograph
28.
வருகின்ற
கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச்
செல்கிறேன். -இத்தொடர், கால வழுவமைத்திக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29.
முன்னுரையில்
முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;
அம்மானை பாடல்கள்,சித்தர்
பாடல்கள்,சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக நான் இலக்கிய அறிவுபெற்றேன். அப்போது அவர்கள்
வெளியிடும் சிறந்த கதைகளை ஏடுகளில் குறித்து வைத்துக் கொள்வேன்.யான் முறையாக ஏட்டு
ஏட்டுக் கல்வி பெற இயலாமல் போனதால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக் கேள்வி ஞானத்தைப் பெருக்கிய
பெருமை திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளுக்கே அதிகம் உண்டு என்றெல்லாம் தமது செவிச்செல்வம் பற்றி ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி ஞானத்தை
அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?
ஆ. ம.பொ.சி. அவர்கள் இலக்கிய
அறிவினை எவ்வாறு பெற்றார்?
இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத ம.பொ.சி.
அதனை எவ்வாறு ஈடு செய்தார்?
31.
உங்களுடன்
பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம்
கல்வி கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது
வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32.
பின்
வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதனை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால்
கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
33.
உள்வாய் வார்த்தை உடம்புத் தொடாது – இடம் சுட்டி பொருள் விளக்குக
34.
“ அன்னை மொழியே“ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார்பாடலை எழுதுக
(அல்லது )
“ நவமணி வடக்கையில் “ எனத் தொடங்கும் தேம்பாவணி
பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
தன்மையணி
என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக
36.
ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் – இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு காண்க.
37.
கொண்டு
கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38.
அ) இரண்டாம்
இராசராச சோழனது மெய்க்கீர்த்திப் பாடலின் அழகிய நயத்தைச் சுவைபட விளக்குக
( அல்லது )
ஆ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாக பெருஞ்சித்திரனார் சுட்டுவன யாவை?
39.
அ) நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள்
நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ) உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும் புயலில்
சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும்,பழுதுபட்ட சாலைகளை சீரமைத்தும்,பழுந்தடைந்த மின்கம்பங்களைச்
சரிசெய்தும் தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.
40.
படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41.
சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும் மகிழனின் மகன் முகில் அங்குள்ள நூலகத்தில் உறுப்பினராக
சேர உள்ளார். தேர்வர் தம்மை முகிலாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.
42.
அ) தூய்மையான
காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில்
பட்டியலிடுக
( அல்லது )
ஆ)
மொழி
பெயர்க்க:-
Among the five geographical divisions of the Tamil country in
Sangam literature, the Marutham region was fit for cultivation, as it had the
most fertile lands. The properity of a
farmer depended on getting the necessary sunlight.Seasonal rains and the
fertility of the soil. Among these elements of nature, sunlight was considered
indispensable by the ancient Tamils.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.
அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்
பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.
( அல்லது )
ஆ) நாட்டு விழாக்கள்
– விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில்
மேடை உரை எழுதுக.
44.
அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து
மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
( அல்லது )
ஆ) ‘ என் மக்கள்
அனைவருக்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன்
வாழ்வார்கள் ‘ என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக் கொண்டவர்களாக
நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
45.
அ) நீங்கள்
சென்று வந்த அரசு பொருட்காட்சியில் அறிவிப்பு – அமைப்பு – சிறு அங்காடிகள் – நிகழ்த்தப்பட்ட
கலைகள் – பேச்சரங்கம் – அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் போன்றவற்றைக்
குறிப்புகளாகக் கொண்டு கட்டுரை எழுதுக.
( அல்லது )
ஆ) உழவே தமிழர்
பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்
- இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.
வினாத்தாள்
வடிவமைப்பு:
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி,சேலம்
Pls modle question paper answer me
ReplyDeleteMadhavi
ReplyDelete