அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பான மாணவச் செல்வங்களுக்கும் இனிய வணக்கம். பொங்கல் விடுமுறை சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்வது முதல் திருப்புதல் தேர்வு. இந்த முதல் திருப்புதல் தேர்வு பொதுத் தேர்வுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த திருப்புதல் தேர்வு விடைத்தாள் பள்ளி அளவில் பரிமாற்றம் செய்து திருத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த திருப்புதல் தேர்வு எவ்வளவு முக்கியமானது என்பது மூலம் அறியலாம். எனவே மாணவர்கள் பொங்கலுக்கு இரண்டு நாள் விடுமுறையை கொண்டாடிவிட்டு ஞாயிறு முதல் உங்களின் கல்விப் பக்கம் தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் எவ்வாறு இந்த திருப்புதல் தேர்வில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்களில் எவ்வாறு அதிகபட்ச மதிப்பெண் பெறுவது என்பதற்கு அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு 45 நிமிடங்கள் உங்களுக்கு பயிற்சி தர இருக்கிறார்கள். இந்த பயிற்சி மாணவர்களாகிய உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் அனுபவமிக்க அவர்கள் உருவாக்கிய மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள்க் கொண்டு உங்களுக்கு பயிற்சி அளிப்பது கூடுதல் பயன் அளிக்கும். இந்த இணைய வகுப்புக்கு மாணவர்கள் தங்கள் புத்தகம், குறிப்பேடு மற்றும் எழுதுகோல் கொண்டு தயாராக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் இந்த இணைய வகுப்பில் இணைய தங்கள் திறன் பேசியில் ZOOM செயலியை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைய வகுப்புக்கான கால அட்டவணை
நாள் : 16-01-2022
நாள் : ஞாயிறு
பாடம் : தமிழ்
நேரம் : காலை 9 மணி முதல் 9.45 மணி வரை
பயிற்சி வழங்குவோர் : திரு. சு. நரேந்திரன்
பயிற்சியில் கலந்துக் கொள்ள
நாள் : 16-01-2022
பாடம் : ஆங்கிலம்
நாள் : ஞாயிறு
நேரம் : காலை 11.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை
பயிற்சி வழங்குவோர் : திருமதி. P. DIVYA
பயிற்சியில் கலந்துக் கொள்ள
நாள் : 16-01-2022
பாடம் : கணிதம்
நாள் : ஞாயிறு
நேரம் : காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை
பயிற்சி வழங்குவோர் : திரு. P.குமரேச கனி
பயிற்சியில் கலந்துக் கொள்ள