காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 13- 01- 2022
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் - 1 - திராவிட மொழிக் குடும்பம்-2
பணித்தாள்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது_________________
அ.தமிழ் ஆ. தெலுங்கு இ. மலையாளம் ஈ. கன்னடம்
2. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ----------------------
அ. 1400 ஆ. 1300 இ. 1600 ஈ. 1700
3. இந்தியாவில் உள்ள மொழிகளை எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கின்றனர்?
அ. 6 ஆ. 7 இ. 4 ஈ. 8
4. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது எனக் கூறியவர் ____________
அ. குமரிலபட்டர் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. ராஸ்க் ஈ. ச. அகத்தியலிங்கம்
5. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர்_____________
அ. குமரிலபட்டர் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ. ராஸ்க் ஈ. ச. அகத்தியலிங்கம்
6. தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என விளக்கியவர் _________
அ. குமரிலபட்டர் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ.ஹீராஸ் பாதரியார் ஈ. ச. அகத்தியலிங்கம்
7. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் ____________
அ. குமரிலபட்டர் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ.ஹீராஸ் பாதரியார் ஈ. ச. அகத்தியலிங்கம்
8. தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் -இம்மொழிகளை ஒரே இனமாக் கருதித் தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் ________________
அ. குமரிலபட்டர் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ.ஹீராஸ் பாதரியார் ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்
9. மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் தமிழியன் என குறிப்பிட்டவர்__________
அ. ஹோக்கன் ஆ. வில்லியம் ஜோன்ஸ் இ.ஹீராஸ் பாதரியார் ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்
10. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – என்னும் நூலை எழுதியவர் _____________
அ. ஹோக்கன் ஆ. கால்டுவெல் இ.ஹீராஸ் பாதரியார் ஈ. பிரான்சிஸ் எல்லிஸ்
11. கீழ்க்கண்டவற்றில் ஒன்று தென் திராவிட மொழிக்குடும்பத்தை சேராதது________________
அ. தமிழ் ஆ. கன்னடம் இ.மலையாளம் ஈ. பிராகுயி
12. திராவிட மொழிகள் மொத்தம் ________________
அ. 32 ஆ. 28 இ.40 ஈ. 25
13. மூன்று என்பது தமிழ்மொழி -மூரு என்பது மொழி _____________
அ. மலையாளம் ஆ. தெலுங்கு இ.கன்னடம் ஈ. துளு
14. பாரதம் என்னும் இலக்கியம் ________ மொழிக்குரியது.
அ. மலையாளம் ஆ. தெலுங்கு இ.கன்னடம் ஈ. துளு
15. பணத்தாள்களில் தமிழ்மொழி இடம் பெறாத நாடு _______________
அ. அமெரிக்கா ஆ. மொரிசியஸ் இ. இலங்கை ஈ. இந்தியா
16. உலகத் தாய்மொழி நாள் ---------------
அ. மார்ச் 21 ஆ. ஏப்ரல் 21 இ. பிப்ரவரி 21 ஈ. ஜனவரி 21
17. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் – இவ்வரிகள் இடம் பெறும் நூல் -------------
அ. குறுந்தொகை ஆ. பெரியபுராணம் இ. பிங்கல நிகண்டு ஈ. தொல்காப்பியம்
18. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடு ----------------
அ. ஆஸ்திரேலியா ஆ. ஜப்பான் இ. இந்தியா ஈ. சிங்கப்பூர்
இணைய வழித் தேர்வு
பணித்தாள் - PDF