8TH - KALVI TV - 19 -01-2022 - PADAI VEYLAM

    https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           19 - 01- 2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் -7 - படைவேழம்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. செயங்கொண்டார் பிறந்த ஊர்____________.

அ. குன்னங்குடி                           ஆ. பரமக்குடி                          இ. தீபங்குடி            ஈ. தூத்துக்குடி

2. பரணிக்கோர் செயங்கொண்டார் என செயங்கொண்டாரை பாராட்டியவர்_______________

அ. மீனாட்சி சுந்தரனார்            ஆ. சுவாமி நாதன்            இ. சொக்கநாதப் புலவர்       ஈ. பரணர்

3. செயங்கொண்டார் யாருடைய அவையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார் _______________

அ. பல்லவர்                        ஆ. சோழர்                          இ. சேரர்            ஈ. பாண்டியர்

4. கலிங்கத்துப் பரணி ---------- வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.

அ. 108                               ஆ. 96                                   இ. 36                 ஈ. 50              

5. தமிழில் முதல்முதலில் எழுந்த நூல் _____________

அ. தூது                             ஆ. காப்பியம்                        இ. காவியம்      ஈ. பரணி

6. முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவர் ______________

அ.  இளந்திரையன்                 ஆ. கருணாகரன் தொண்டைமான்          இ. சாணக்கியன்       ஈ.இரண்டாம் குலோத்துங்கன்

7.  பரணியை தென்தமிழ்த் தெய்வபரணி என பரணியைப் புகழ்ந்தவர்_______________

அ. ஓட்டக்கூத்தர்                           ஆ. கம்பர்                               இ. ஒளவையார்                      ஈ. அதிவீரராம பாண்டியன்

8. கலிங்கத்துப் பரணி _______________ இசையால் பாடப்பெற்றது.

அ. துள்ளல்                                 ஆ.  தூங்கல்                          இ. கலித்தாழிசை                               ஈ. அகவலோசை

9 போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடுவது _________

அ. பரணி                  ஆ. காவியம்                                   இ. காப்பியம்                                    ஈ. தூது

10 கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ________

அ. வீரம்                    ஆ. அச்சம்                                       இ. நாணம்                         ஈ. மகிழ்ச்சி

இணையவழித் தேர்வு

பணித்தாள் - PDF


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post