காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 19 - 01- 2022
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -8- சங்க இலக்கியத்தில் அறம்
பணித்தாள்
அ.சரியான
விடைத் தேர்வு செய்க.
1.
மேன்மை தரும் அறம் என்பது-----------
அ)கைம்மாறு
கருதாமல் அறம் செய்வது ஆ)மறுபிறப்பில்
பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது
இ)புகழ்
கருவி அறம் செய்வது ஈ)பதிலுதவி
பெறுவதற்காக அறம்செய்வது
2)
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்
அ)உதியன்,
சேரலாதன் ஆ)அதியன்,பெருஞ்சாத்தன் இ)பேகன்,கிள்ளிவளவன்
ஈ)நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி
3)
கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று
கூறியவர்-------
அ)
கால்டுவெல் ஆ)
அர்னால்டு இ)
மூ.வ ஈ) பாவாணர்
4)
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக்
கூறியவர்-------
அ)ஏணிச்சேரி
முடமோசியார் ஆ) ஔவையார்
இ)
கபிலர்
ஈ) பரணர்
5)”இம்மைச்
செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை
வணிகன் ஆஅய் அல்லன்” -என்று
குறிப்பிடப்பட்ட வள்ளல்
அ)பாரி
ஆ) பேகன்
இ)ஆய்
ஈ)
கர்ணன்
6)
அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டவை
அ)தானம்,
தவம்
ஆ)உறுபொருள்,திறைப்பொருள்
இ)
செங்கோல்,கொடுங்கோல் ஈ)செங்கோல்,வெண்கொற்றக்குடை
7)
நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு
உணவுப்பெருக்கம் காண்பது-----கடமை
அ)
அரசன் ஆ) குடிமக்கள் இ)
வணிகர் ஈ)
அமைச்சர்
8)
ஊன்பொதிப் பசுங்குடையார் கூறும் அரசியல்
அறம்
அ)முறையாக
வரிவசூலித்தல் ஆ)அறத்தின்
அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்குதல்
இ)குடிமக்களின்
வறுமை போக்குதல் ஈ)எல்லைகளை
விரிவாக்கல்
9)”நன்றும்
தீதும் ஆய்தலும் அன்பும் அறனும்காத்தலும்
அமைச்சர் கடமை”-என்று குறிப்பிடும் நூல்
அ)
மதுரைக்காஞ்சி ஆ)புறநானூறு
இ)
அகநானூறு ஈ) பதிற்றுப்பத்து
10)
அரசருக்கு உதவிய அமைச்சர்களை
‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’
எனப்போற்றியவர்
அ)கபிலர்
ஆ)
இளங்கோவடிகள் இ)
மோசிகீரனார் ஈ)
மாங்குடி மருதனார்
11)’அறம்
அறக்கண்ட நெறிமான் அவையம்’ எனக்
குறிப்பிடும் நூல்
அ)
மதுரைக்காஞ்சி ஆ)புறநானூறு
இ)
அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
12)
மதுரையில் இருந்த அவையம்
பற்றிக்குறிப்பிடும் நூல்
அ)
மதுரைக்காஞ்சி
ஆ)புறநானூறு
இ)
அகநானூறு ஈ) பதிற்றுப்பத்து
13)
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்யக்
கூடாது எனக் கூறியவர்
அ)மாங்குடி
மருதனார் ஆ)அவ்வையார்
இ)ஆவூர்
மூலங்கிழார் ஈ)கிள்ளிவளவன்
14)
பின்வருவனவற்றுள் போர் அறம் எது?
அ)ஆயிரம்
யானைகளைக் கொல்லுதல் ஆ)வீரமற்றோர்,புறமுதுகிட்டோரை
எதிர்த்துப் போரிடாமை
இ)அனைவரையும்
பழிவாங்குதல்
ஈ)பொருள் கொடுத்து உதவுதல்
15)
தமிழர்களால் வீரத்தை போன்றே போற்றப்பட்ட
பண்பு
அ)
கொடை ஆ) போர்த்திறம்
இ)
கல்வி ஈ) தொழில்கள்
16)’செல்வத்துப்
பயனே ஈதல்’ - என்று
கூறியவர்
அ)
கபிலர் ஆ) அவ்வையார்
இ)
நக்கீரனார் ஈ) மாங்குடி மருதனார்
17)
வள்ளல் எழுவரின் கொடை பெருமையைக்
குறிப்பிடும் நூல்
அ)பெரும்பாணாற்றுப்படை ஆ)சிறுபாணாற்றுப்படை இ)புறநானூறு ஈ)கலித்தொகை
18)
கொடை இலக்கியங்களாகக் கருதப்படுபவை
அ)சங்க
இலக்கியங்கள் ஆ)நீதி இலக்கியங்கள்
இ)ஆற்றுப்படை இலக்கியங்கள் ஈ)காப்பியங்கள்
19)
சேர அரசர்களின் கொடைப் பதிவாக உள்ள நூல்
அ)புறநானூறு
ஆ)கலித்தொகை
இ)பட்டினப்பாலை
ஈ)பதிற்றுப்பத்து
20)
’இல்லோர் ஒக்கல் தலைவன்,பசிப்பிணி
மருத்துவன்’ என்றெல்லாம்
போற்றப்பட்டவர்
அ)வள்ளல்கள்
ஆ)அரசர்கள்
இ)அமைச்சர்கள் ஈ)மருத்துவர்கள்